புதுச்சேரியில் ரங்கசாமிதான் முதலமைச்சர் ; போட்டியில்லை -பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர்
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர் ரங்கசாமிதான் முதலமைச்சர் பதவிக்கு பாஜக போட்டியில்லை என்றும் பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி
30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி மாநில சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க 9 தொகுதிகளிலும், அ.தி.மு.க 5 தொகுதிகளிலும் போட்டியிட்டன. என்ஆர் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பா,ஜனதா 6 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.
கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக பாஜக அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர் ரங்கசாமிதான் என்றும், முதலமைச்சர் பதவிக்கு பாஜக போட்டியில்லை என்றும் பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story