டெல்லியில் ஆக்சிஜன் செறிவூட்டிகளை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த 4 பேர் கைது


டெல்லியில் ஆக்சிஜன் செறிவூட்டிகளை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 3 May 2021 5:56 PM IST (Updated: 3 May 2021 5:56 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் ஆக்சிஜன் செறிவூட்டிகளை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுடெல்லி,

டெல்லியில் ஆக்சிஜன் செறிவூட்டிகளை அதிக விலைக்கு விற்பனை செய்துவந்த சகோதரர்கள் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கும் கருவி, 115 ஆக்சிஜன் செறிவூட்டிகள் போன்றவற்றை அவர்களிடமிருந்து போலீசார் கைப்பற்றினர்.

ஆக்சிஜன் செறிவூட்டியை கள்ளச் சந்தையில் பதுக்கி பின்னர் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆக்சிஜன் செறிவூட்டிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக வந்த தகவலைத் தொடர்ந்து போலீசார் அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர்.

இதில் ஜானக்புரி பகுதியைச் சேர்ந்த 2 சகோதரர்கள் உள்பட சாகர்பூர் பகுதியைச் சேர்ந்த நான்கு பேரை  கைது செய்தனர்.

அவர்கள் ஜானக்புரி பகுதியில் கிடங்கு வைத்து ஆக்சிஜன் உபகரணங்களையும், செறிவூட்டிகளையும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர், ஆக்சிஜன் வழங்கும் கருவி, 115 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

Next Story