சட்டமன்ற கட்சி தலைவராக ரங்கசாமி தேர்வு: பதவியேற்பு விழா நடத்த நேரம் கேட்கும் போது விழா நடத்தப்படும் - தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரி சட்டமன்ற கட்சி தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பதவியேற்பு விழா நடத்த நேரம் கேட்கும் போது விழா நடத்தப்படும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து பெரும்பாலான தொகுதிகளை என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி கைப்பற்றினார். மேலும் முதல்வர் வேட்பாளராக தாமே இருப்பதாக அவர் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
என்.ஆர். காங்கிரஸின் சட்டப்பேரவைக் குழு தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது ஆட்சி அமைக்கும் நோக்கில் துணை நிலை ஆளுநரை அவர் சந்தித்தார்.
இந்நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- சட்டமன்ற கட்சி தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை என்னிடம் வழங்கினார். பதவியேற்பு விழா நடத்த நேரம் கேட்கும் போது விழா நடத்தப்படும் என்றார்.
Related Tags :
Next Story