கொரோனா பணியில் ஈடுபட்டவர்களுக்கு முன்னுரிமை மத்திய அரசு அறிவிப்பு
எதிர்கால மருத்துவ பணி நியமனங்களில் கொரோனா பணியில் ஈடுபட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு மருத்துவத்துறையில் பணியாளர்களை அதிகரிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இவ்வாறு கொரோனா பணியில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்களுக்கு பல்வேறு திட்டகளில் முன்னுரிமை வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அந்தவகையில் எதிர்காலத்தில் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களை அரசு பணியில் நியமிக்கும்போது 100 நாட்கள் கொரோனா பணியில் ஈடுபட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
இந்த பணியிட முன்னுரிமை மட்டுமின்றி, பிரதமரின் புகழ்பெற்ற கொரோனா தேசிய சேவை சம்மான் திட்டமும் அவர்களுக்கு வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story