கொரோனா பரவல் எதிரொலி: பீகாரில் உள்விளையாட்டு மைதானம் கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றம்


கொரோனா பரவல் எதிரொலி: பீகாரில் உள்விளையாட்டு மைதானம் கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றம்
x
தினத்தந்தி 4 May 2021 12:23 AM IST (Updated: 4 May 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பீகாரில் உள்விளையாட்டு மைதானம் ஒன்று கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

பாட்னா,

இந்தியாவில் கொரோனா தனது கோரப்பிடியை இறுக்கி உள்ளது. கொரோனா முதல் அலையில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்து இருந்தனர். கடந்த ஆண்டு இறுதியில் இருந்து சற்று குறைந்து இருந்த கொரோனா தற்போது மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது.

இந்த முறை கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வீசி வருகிறது. இந்த அலையில் சிக்கி ஏராளமானோர் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருகிறார்கள். நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு படுக்கை கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் வருகின்றனர்.

இந்த நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பாட்லிபுத்ரா உள்விளையாட்டு மைதானம் 110 படுக்கைகள் வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. எல்லா படுக்கைகளிலும் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. 110 படுக்கைகளுக்கு வென்டிலேட்டர் வசதி உள்ளது. 

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த மைதானம் அதிநவீன வசதிகளுடன் மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மருத்துவமனை விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story