இந்தியாவிலிருந்து இத்தாலி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் 30 பேருக்கு கொரோனா தொற்று


இந்தியாவிலிருந்து இத்தாலி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் 30 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 4 May 2021 4:53 AM IST (Updated: 4 May 2021 4:53 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவிலிருந்து இத்தாலி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பெரும்பாலான நாடுகள் இந்திய விமான சேவைக்கு தடைவிதித்துள்ளன. பல நாடுகள் கடும் சோதனைக்குப்பின் இந்திய விமானங்களை அனுமதிக்கின்றன.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் இருந்து இத்தாலி தலைநகர் ரோமுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது.

இந்த விமானத்தில் விமான ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்தனர். வியாழக்கிழமை விமானம் ரோமில் தரையிறங்கியதும் விமானத்தில் வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் விமான ஊழியர்கள் 2 பேர் உள்பட 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் உள்பட விமானத்தில் வந்த 242 பேரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story