ராஜீவ்காந்தி மகளிர் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனே தெரிவிக்க வேண்டும்; சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் உத்தரவு


ராஜீவ்காந்தி மகளிர் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனே தெரிவிக்க வேண்டும்; சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் உத்தரவு
x
தினத்தந்தி 3 May 2021 11:51 PM GMT (Updated: 3 May 2021 11:51 PM GMT)

ராஜீவ்காந்தி மகளிர் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

அவசர கூட்டம்

புதுச்சேரி ராஜீவ்காந்தி மகளிர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு குறித்த அவசரக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தலைமை தாங்கினார். இதில் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி இயக்குனர், தனியார் மருத்துவ கல்லூரிகளிகளின் நிர்வாகிகள், ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சுகாதாரத்துறை இயக்குனர் பேசியதாவது:-

இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள படுக்கை எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை கூடுதலாக பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் இருந்து எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு வரும் ஆர்.டி.பி.சி.ஆர். முடிவுகளை உடனே தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை வீட்டிற்கு சென்று பரிசோதித்து வீட்டில் தனிமைப்படுத்த முடியாதவர்களை ஆம்புலன்சில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவ கல்லூரி மருத்துவமனை அல்லது இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளை பரிசோதிக்க 10 மருத்துவக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வீடு, வீடாக சென்று கொரோனா நோயாளிகளை கண்காணிப்பார்கள். மேலும் அவர்களை கண்காணிப்பதற்கும் மருத்துவ அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.


Next Story