தேசிய செய்திகள்

கொரோனா பரவல் அதிகரிப்பு: கேரளாவில் இன்று முதல் கட்டுப்பாடுகள் என்ன? + "||" + Corona vulnerability increase: What are the first restrictions in Kerala today?

கொரோனா பரவல் அதிகரிப்பு: கேரளாவில் இன்று முதல் கட்டுப்பாடுகள் என்ன?

கொரோனா பரவல் அதிகரிப்பு: கேரளாவில் இன்று முதல் கட்டுப்பாடுகள் என்ன?
கேரளாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்து இன்று முதல் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம், 

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்து இன்று முதல் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக நேற்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், “ அத்தியாவசிய சேவை தவிர அனைத்து நடவடிக்கைகளிலும் கடும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். மாநில மத்திய அரசு நிறுவனங்கள் அதன் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனங்கள், அத்தியாவசிய சேவைப்பிரிவுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் அலுவலகத்தில் பணிபுரிவார்கள். அவசியமான ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

அத்தியாவசிய சேவை தொடர்பாக பணிபுரியும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் 24 மணி நேரமும் பணியாற்றலாம். ஆக்சிஜன் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சுகாதாரத்துறையில் பணிபுரிபவர்கள் நிறுவனத்தின் அடையாள ஆவணத்தை கையில் வைத்திருக்க வேண்டும். தொலைதொடர்பு சேவை, உள்கட்டமைப்பு சேவை, இணைய சேவை வழங்குபவர்கள், பெட்ரோல், எல்.பி.ஜி வழங்குவோர் அத்தியாவசிய சேவைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

நோயாளிகள் மற்றும் அவர்களது தோழர்கள் அவசர காலத்தில் பயணம் செய்யலாம். பணியாளர்கள், முதலாளிகள் இரட்டை முகக்கவசம் அணிய வேண்டும். கடைகள் உணவகங்கள் இரவு 9 மணிக்கு மூட வேண்டும்.  திருமணத்தில் அதிகபட்சமாக 50 பேரும், இறுதிசடங்கில் அதிகபட்சமாக 20 பேரும் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படும். அனைத்து வகையான திரைப்பட மற்றும் சீரியல் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட வேண்டும்” என்று அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில், கைவசம் இருந்த ஒரு தொகுதியையும் இழந்த பா.ஜனதா; ‘மெட்ரோமேன்’ ஸ்ரீதரன், நடிகர் சுரேஷ் கோபி போராடி தோல்வி
கேரளாவில், தனது கைவசம் இருந்த ஒரு தொகுதியையும் பா.ஜனதா இழந்தது. மெட்ரோமேன் ஸ்ரீதரன், நடிகர் சுரேஷ் கோபி ஆகியோர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியபோதிலும், இறுதியில் தோல்வி அடைந்தனர்.
2. கேரளாவில் 6 நாட்கள் ஊரடங்கு - முதல்-மந்திரி பினராயி விஜயன் தகவல்
கேரளாவில் வரும் 4-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
3. கேரளாவில் முழு ஊரடங்கு தேவையில்லை: கேரள மந்திரி சபை தீர்மானம்
கேரளாவில் 1 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க மந்திரி சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
4. மராட்டிய மாநிலத்தில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி தொடங்க வாய்ப்பு - மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்
மராட்டிய மாநிலம் வார்தாவில் இன்று முதல் ரெம்டெசிவிர் உற்பத்தி தொடங்க வாய்ப்பு உள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
5. கேரளாவில் ஓட்டு எண்ணிக்கையன்று முழு ஊரடங்கு தேவை இல்லை - கேரளா ஐகோர்ட்டு உத்தரவு
அரசும், தேர்தல் ஆணையமும் எடுத்துள்ள தொற்று கட்டுப்பாடு நடவடிக்கைகள் திருப்தியாக உள்ளதால், ஓட்டுஎண்ணிக்கையன்று( ேம 2-ந் தேதி) கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்த தேவை இல்லை என ஐகோா்ட்டு உத்தரவிட்டுள்ளது.