பீகாரில் மே 15 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: நிதிஷ் குமார் அறிவிப்பு


பீகாரில் மே 15 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: நிதிஷ் குமார் அறிவிப்பு
x
தினத்தந்தி 4 May 2021 12:06 PM IST (Updated: 4 May 2021 12:06 PM IST)
t-max-icont-min-icon

பீகாரில் மே 15 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல் மந்திரி நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

பாட்னா,

பீகாரில் வரும் மே 15 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.கொரோனா தொற்று  பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ஊரடங்கு நாட்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் பற்றி நெருக்கடி மேலாண்மை குழு விரைவில் அறிவிக்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் 11,407- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று 82 பேர் உயிரிழந்தனர். பீகாரில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5.09- லட்சம் ஆக உயர்ந்துள்ளது. 

Next Story