ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைப்பு - மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்


ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைப்பு - மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்
x
தினத்தந்தி 4 May 2021 5:07 PM IST (Updated: 4 May 2021 5:07 PM IST)
t-max-icont-min-icon

மே மாதம் நடைபெற இருந்த ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவின் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி.க்களில், மாணவர்கள் சேர்க்கைகாக ஒவ்வொரு ஆண்டும் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் இந்த தேர்வு 4 கட்டங்களாக, பல்வேறு மாநில மொழிகளில் நடத்தப்படுகிறது.

அதன்படி முதல் இரண்டு கட்டத் தேர்வுகள், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற்றது. இதையடுத்து ஏப்ரல் 27, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மாதம் மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்தது. 

இந்த நிலையில் மே மாதம் நடைபெற இருந்த ஜே.இ.இ. முதன்மை தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், மறுதேர்வு குறித்து தேர்வு தேதிக்கு பதினைந்து நாட்கள் முன்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

Next Story