கோவா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை - சுகாதார அமைச்சர் தகவல்


கோவா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை - சுகாதார அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 4 May 2021 6:02 PM GMT (Updated: 4 May 2021 6:02 PM GMT)

கோவா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்று அம்மாநில சுகாதார அமைச்சர் விஸ்வாஜித் ரானே தகவல் தெரிவித்துள்ளார்.

கோவா,

கொரோனா வைரஸ் என்ற கொலைகார வைரசின் கோரப்பிடியில் சிக்கி நாடு தத்தளித்து கொண்டிருக்கிறது. முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்த இந்தியா, இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. 

கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கியுள்ள பல மாநிலங்களில் நோயாளிகளின் பெருக்கத்தால் படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையை சரி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், பல உலக நாடுகள் இந்தியாவிற்கு நேசக்கரம் நீட்டி வருகின்றன. 

இந்நிலையில், கோவா மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்று அம்மாநில சுகாதார அமைச்சர் விஸ்வாஜித் ரானே தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து சுகாதார அமைச்சர் விஸ்வாஜித் ரானே கூறியதாவது:-

கோவா மாநிலத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது, ஆனால் தற்போதைய தேவையை பூர்த்தி செய்ய ஆக்சிஜன் பயன்பாட்டை நாங்கள் சரி செய்து வருகிறோம். மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story