ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி அதிகரிப்பு - மத்திய மந்திரி தகவல்


ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி அதிகரிப்பு - மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 4 May 2021 11:56 PM IST (Updated: 4 May 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா 2-வது அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் ரெம்டெசிவிர் மருந்து தேவை பலமடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை ராஜாங்க மந்திரி மன்சுக் மாண்டவியா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘கடந்த ஏப்ரல் 12-ந் தேதியையொட்டி மாதம் 37 லட்சம் குப்பிகளாக இருந்த ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி, மே முதல் வாரத்தில் சுமார் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டு 1.05 கோடி குப்பிகளாக உயர்ந்துள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு நாடு முழுவதும் 20 உற்பத்திக்கூடங்களில் உற்பத்தி செய்யப்பட்ட ரெம்டெசிவிர், தற்போது 57 உற்பத்திக்கூடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ரெம்டெசிவிர் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதை உற்பத்தி செய்யும் திறன் 3 மடங்கு அதிகரித்துள்ளது. விரைவிலேயே நம்மால், அதிகரித்திருக்கும் தேவைக்கு ஏற்ப இம்மருந்தை வழங்க இயலும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ், கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து மத்திய அரசு கடுமையாகப் போராடி வருகிறது.’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story