கொரோனா தடுப்பூசிகளின் விலையைக் குறைக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை - மத்திய அரசுக்கு கபில் சிபல் கேள்வி
கொரோனா தடுப்பூசிகளின் விலையைக் குறைக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய அரசுக்கு கபில் சிபல் கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் மந்திரியுமான கபில் சிபல் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான தடுப்பூசிகளின் விலையை நிர்ணயிக்க மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை அத்தியாவசியப் பொருட்கள் சட்டப் பிரிவு 3 இன் கீழ் கொண்டு வந்தால் அவற்றின் விலையைக் கட்டுப்படுத்த முடியும்.
தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி பெற வேண்டும் என்பது அரசின் பொறுப்பு. எனவே, தடுப்பூசிகளை இச்சட்டத்தின் கீழ் கொண்டு வந்து விலையைக் குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோன்று மற்றொரு சட்டமான மருந்துகள் மற்றும் அழகுசாதனச் சட்டத்தின் மூலமாக அத்தியாவசிய மருந்துகள் தேசிய பட்டியலின் கீழ் கொண்டு வந்து தடுப்பூசி விலைகளை நிர்ணயிக்க முடியும்.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ய உடனடியாக அவசரச் சட்டம் கொண்டுவந்த மோடி அரசுக்கு தடுப்பூசிகளுக்கு சட்டம் கொண்டுவர முடியாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Related Tags :
Next Story