தமிழகத்துக்கு அளிக்கப்பட்ட தடுப்பூசியில் 8.83 சதவீதம் வீணானது; மத்திய அரசு தகவல்
தமிழகத்திற்கு இதுவரை 71 லட்சத்து 3 ஆயிரத்து 950 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 8.83 சதவீதம் வீணானதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவிததுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வௌியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
17 கோடிஅடுத்த 3 நாட்களில், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 36 லட்சத்து 37 ஆயிரத்து 30 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு கூடுதலாக அளிக்க உள்ளது. இதுவரை, 17.02 கோடி கோவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது.
நேற்்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி, 16 கோடியே 7 லட்சத்து 94 ஆயிரத்து 796 டோஸ் தடுப்பு மருந்து (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 94 லட்சத்து 47 ஆயிரத்து 614 தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் கையிருப்பில் உள்ளன.
8.83 சதவீதம்தமிழகத்திற்கு இதுவரை 71 லட்சத்து 3 ஆயிரத்து 950 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 8.83 சதவீதம் வீணாகின. இதனையும் சேர்த்து, 67 லட்சத்து 83 ஆயிரத்து 227 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 3 லட்சத்து 20 ஆயிரத்து 723 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்தின்வசம் கையிருப்பில் உள்ளன. 1 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் விரைவில் அளிக்கப்பட உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.