கொரோனா பரவல் அதிகரிப்பு: மத்தியபிரதேசத்தில் முழு ஊரடங்கு அமல்
மத்தியபிரதேசத்தில் மே 15-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
போபால்,
மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா பரவல் மெல்ல அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. அம்மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 12 ஆயிரத்து 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மத்தியபிரதேசத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 37 ஆயிரத்து 406 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 88 ஆயிரத்து 614 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து மேலும் 12 ஆயிரத்து 965 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மத்தியபிரதேசத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 42 ஆயிரத்து 632 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் இன்று 86 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மத்தியபிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 160 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மத்தியபிரதேசத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இன்று முதல் மே 15-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்தியபிரதேச முதல்மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது, கொரோனா பரவல் சங்கி தொடரை தடுக்க மே 15-ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளோம். முழு ஊரடங்கை நீண்ட நாட்களுக்கு நீட்டிக்க முடியாது. ஆனால், கொரோனா பரவல் 18 சதவிகிதம் என்ற அளவில் உள்ளபோது நாம் கடைகளை திறந்துவைக்க முடியாது’ என்றார்.
Related Tags :
Next Story