மும்பையில் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்
நாக்பூரில் இருந்து விமானம் புறப்படும் போது விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்தது.
மும்பை,
நாக்பூரில் இருந்து ஐதராபாத்திற்கு விமானப் பணியாளர்கள் இருவர், நோயாளி, அவருடைய உறவினர் மற்றும் டாக்டர் என ஐந்து பேருடன் ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று புறப்பட்டது. ஏர் ஆம்புலன்ஸ் விமானம் டேக் ஆப் ஆகும் போது, அதன் சக்கரம் ஓடுபாதையில் கழன்று விழுந்தது.
இதனைத் தொடர்ந்து மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வசே விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க விமானி உதவிக் கேட்டார். விமானத்தை தரையிறக்க அனுமதி கிடைத்ததும், பெல்லி-லேண்டிங் உருவாக்கப்பட்டு விமானம் தரையிறக்கப்பட்டது.
பெல்லி-லேண்டிங் ஆபத்தானது என்பதால் விமான நிலையத்தின் அவசர உதவிக்கான தீயணைப்பு, மீட்ப்புப்பணியாளர்கள், மருத்துவக்குழு விமானத்தில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டு சிகிச்சை அளிக்க தயார்படுத்தப்பட்டார்கள்.
விமானம் ரன்வேயில் இறங்கும்போது தீப்பிடிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை காரணமாக நுரைகள் தெளிக்கப்பட்டிருந்தன. விமானம் தரையிறங்கியதும் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் மற்றும் விமான நிலையத்தில் அனைத்து விமானங்கள் வரும் மற்றும் புறப்படும் நேரத்தில் எந்த வித மாற்றமும் இல்லை.
Related Tags :
Next Story