புதுச்சேரியில் பாஜகவுக்கு 1 துணை முதல்வர் மற்றும் 2 அமைச்சர்களும் ஒதுக்கீடு - மத்திய இணை மந்திரி கிஷன்ரெட்டி தகவல்


புதுச்சேரியில் பாஜகவுக்கு 1 துணை முதல்வர் மற்றும் 2 அமைச்சர்களும் ஒதுக்கீடு - மத்திய இணை மந்திரி கிஷன்ரெட்டி தகவல்
x
தினத்தந்தி 7 May 2021 3:48 PM IST (Updated: 7 May 2021 3:48 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15வது சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிந்து, என்ஆர் காங்கிரஸ், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கிறது.

மொத்தமுள்ள 30 இடங்களில் இக்கூட்டணி 16 (என் ஆர் காங்கிரஸ் 10, பாஜக 6) இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது.

என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் என். ரங்கசாமி சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வராக ஆளுநர் மாளிகையில் இன்று பொறுப்பேற்றார்.

இந்நிலையில்,  புதுச்சேரி பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு  செய்யப்பட்டுள்ளார்.  என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 3 அமைச்சர்களும், பாஜகவுக்கு 1 துணை முதல்வர் மற்றும் 2 அமைச்சர்களும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய இணை மந்திரி கிஷன்ரெட்டி தெரிவித்துள்ளார். 

Next Story