வருவாய் பற்றாக்குறை நிதி: தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.183.67 கோடி ஒதுக்கீடு

வருவாய் பற்றாக்குறை நிதி: தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.183.67 கோடி ஒதுக்கீடு
x

வருவாய் பற்றாக்குறை மானியமாக 17 மாநிலங்களுக்கு மத்திய அரசு 9 ஆயிரத்து 871 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. தமிழகத்திற்கு 183.67 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

புதுடெல்லி,

வருவாய் பற்றாக்குறை மானியமாக 17 மாநிலங்களுக்கு மத்திய அரசு 9 ஆயிரத்து 871 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. தமிழகத்திற்கு 183.67 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. 

மாநிலங்களின் வருவாய் மற்றும் செலவினத்துக்கு இடையிலான வித்தியாசத்தை பொருத்து வருவாய் பற்றாக்குறை நிதி மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த மாதத்திற்கு தமிழகம், ஆந்திரா, அரியானா, அசாம், இமாச்சல பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு 9 ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.  

ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் 2 தவணைகளையும் சேர்த்து இந்த நிதியாண்டில் இதுவரை 19 ஆயிரத்து 742 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் வருவாய் பற்றாக்குறை மானியமாக தமிழகத்திற்காக 183.67 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இரண்டு தவணைகளையும் சேர்த்து தமிழகத்திற்கு இதுவரை ரூ.367.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை நிதியாக 1 லட்சத்து 18 ஆயிரத்து 452 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று 15-வது நிலைக்குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த தொகை 12 தவணைகளாக ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Next Story