மேற்கு வங்கத்தில் வன்முறை சம்பவம்: மத்திய குழு ஆய்வு
மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து 4 பேர் கொண்ட மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோதல் முடிவுகள் வெளியானவுடன், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு எதிராக திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனா். சில இடங்களில் பாஜக அலுவலகங்களுக்கு தீவைக்கப்பட்ட விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
வன்முறையில் தங்கள் கட்சியைச் சோந்த பல தொண்டர்கள் கொல்லப்பட்டதாக பாஜக குற்றம் சாட்டியது. அதேபோல இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சோந்தவா்களும் திரிணமுல் தொண்டர்கள் தாக்கப்பட்டதாக அக்கட்சியினா் தெரிவித்தனர்.
மேலும், வன்முறையில் தாக்கப்பட்ட பாஜகவின் குடும்பத்தினரை சந்திக்க மேற்கு வங்கம் சென்ற மத்திய மந்திரி வி.முரளிதரன் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் 4 பேர் கொண்ட குழு தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து அறிக்கை ஓரிரு நாள்களில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story