கர்நாடகா: கொரோனா கட்டுப்பாடுகள் வெற்றிபெறாததால் 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்
கர்நாடகாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், முதல்-மந்திரி எடியூரப்பா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், கொரோனா ஊரடங்கு உத்தரவு வெற்றிகரமாக இல்லை. எனவே, கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது.
மே 10ஆம் தேதி காலை 6 மணி முதல் 24ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு விதிக்கப்படுகிறது. மருத்துவ சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
மேலும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகைக் கடைகள் மற்றும் உணவகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மதுபான விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் மாநிலம் முழுவதும் தொழிற்சாலைகளை மூடவும் மாநில அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story