சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் மருத்துவ உதவிப்பொருட்கள் இந்தியா வருகை
சிங்கப்பூரில் இருந்து மருத்துவ உதவிப்பொருட்கள் ஐ.எல் -76 ரக ராணுவ விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தன.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் வெளிநாடுகளில் இருந்தும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன.
அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டில் இருந்து ஐ.எல் -76 ரக ராணுவ விமானம் மூலம் மருத்துவ உதவிப்பொருட்கள் இந்தியா வந்தடைந்தன. ஏற்கனவே சிங்கப்பூரில் இருந்து ஆக்சிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்கள் இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்படத்தக்கது.
Related Tags :
Next Story