‘கோவின்’ இணையதளத்தில் இன்று முதல் 4 இலக்க பாதுகாப்பு எண்


‘கோவின்’ இணையதளத்தில் இன்று முதல் 4 இலக்க பாதுகாப்பு எண்
x
தினத்தந்தி 8 May 2021 5:51 AM IST (Updated: 8 May 2021 5:51 AM IST)
t-max-icont-min-icon

கோவின் செயலியில் இன்று (சனிக்கிழமை) முதல் ஒரு 4 இலக்க பாதுகாப்பு எண் அறிமுகப்படுத்தப்படுகிறது.

புதுடெல்லி, 

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோர், அதற்கு ‘கோவின்’ இணையதளத்தில் முன்பதிவு செய்யவேண்டும்.

ஆனால் அந்த இணையதளத்தில் முன்பதிவு செய்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் தடுப்பூசி போடச் செல்லாதவர்களுக்கும், அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்தது.அதுகுறித்து ஆராய்ந்தபோது, பெரும்பாலும் தடுப்பூசி போடும் அமைப்பினர், தடுப்பூசி போடப்பட்டதாக தவறாக தகவல் பதிவு செய்ததே அதற்கு காரணம் எனத் தெரியவந்தது.

அதுபோன்ற தவறுகளையும், அதனால் மக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களையும் குறைக்க கோவின் செயலியில் இன்று (சனிக்கிழமை) முதல் ஒரு 4 இலக்க பாதுகாப்பு எண் அறிமுகப்படுத்தப்படுகிறது. தடுப்பூசிக்காக முன்பதிவு செய்வோருக்கு அந்த 4 இலக்க எண் வழங்கப்படும்.

பின்னர் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது, 4 இலக்க எண் கேட்கப்படும். அது கோவின் இணையதளத்திலும் பதிவு செய்யப்பட்டு, தவறான தகவல் பதிவு செய்வது தவிர்க்கப்படும்.

இந்த நடைமுறையால், தடுப்பூசி போடுவோர் குறித்த தவறான தகவல் பதிவு தடுக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story