பெண் பயணிக்கு திடீர் உடல்நல குறைவு; இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறங்கியது
பெண் பயணிக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறங்கியது.
விஜயவாடா,
ஆந்திர பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் கன்னாவரம் விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் ஒன்று இன்று காலை 7.40 மணியளவில் அவசரமாக தரையிறங்கியது.
அந்த விமானத்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவருக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் உடனடியாக விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதன்பின் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை விமான நிலைய இயக்குனர் மதுசூதன ராவ் உறுதி செய்துள்ளார்.
Related Tags :
Next Story