கொரோனா சிகிச்சை: பவுடர் வடிவில் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்; மேலும் ஒரு மருந்துக்கு ஒப்புதல்


கொரோனா சிகிச்சை: பவுடர் வடிவில் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்; மேலும் ஒரு மருந்துக்கு ஒப்புதல்
x
தினத்தந்தி 8 May 2021 3:53 PM IST (Updated: 8 May 2021 4:50 PM IST)
t-max-icont-min-icon

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் தயாரிக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மருந்துக்கு ம்ருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் ஒப்புதல் அளிக்கப்ட்டு உள்ளது.

புதுடெல்லி

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலையட் சயின்சஸ் (ஐ.என்.எம்.ஏ.எஸ்) ஐதராபாத்தின் டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுடன் இணைந்து 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) என்ற  மருந்தை உருவாக்கியுள்ளது.

இந்த மருந்து கடுமையான கொரோனா நோயாளிகளுக்கு மிதமான ஒரு துணை சிகிச்சை மருந்தாக பயன்படுகிறது. தற்போது இந்த மருந்து அவசரகால பயன்பாட்டிற்கு மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) ஒப்புதல் அளித்துள்ளது.

இது பவுடர் வடிவில் உள்ளது. இந்த மருந்தை தண்ணீரில் கலக்கிக் குடிக்கலாம். 

இதுகுறித்து  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஒரு அறிக்கையில் கூறி உள்ளதாவது:-

இந்த மருந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளிகளை விரைவாக மீட்டெடுக்க உதவுகிறது மற்றும் ஆக்சிஜன் தேவையை குறைக்கிறது என்பதை மருத்துவ சோதனை முடிவுகள் காட்டுகின்றன. குளுக்கோஸின் பொதுவான மூலக்கூறு மற்றும் அனலாக் என்பதால், அதை எளிதாக உற்பத்தி செய்து ஏராளமான அளவில் கிடைக்கச் செய்யலாம். இந்த மருந்துமூலம் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகள் கொரோனா பரிசோதனையில் அதிக விகிதம்  கொரோனா இல்லை என தெரிவந்து உள்ளது என கூறி உள்ளது.


Next Story