நாட்டில் இதுவரை 16.73 கோடிக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய சுகாதாரத்துறை
நாட்டில் இதுவரை 16.73 கோடிக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் இதுவரை 16.73 கோடிக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி,
கொரோனா இரண்டாவது அலையில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், சர்வதேச சமூகம் அளித்துவரும் உதவிகளை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் முறையாக ஒதுக்கப்பட்டு, விநியோகிக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது.
இதுவரை 2,933 பிராணவாயு செறிவூட்டிகள், 2,429 பிராணவாயு சிலிண்டர்கள், 13 பிராணவாயு உற்பத்தி கருவிகள், 2,951 செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் சுமார் 3 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 16.73 கோடியை இன்று கடந்துள்ளது.
தமிழகம் (10,703) உள்ளிட்ட 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 18-44 வயதில் 14,88,528 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது.
இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட அறிக்கையின்படி 24,37,299 முகாம்களில் 16,73,46,544 தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 23 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story