சிறைச்சாலைகளில் கூட்ட நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுங்கள் -சுப்ரீம் கோர்ட்
நாட்டில் கொரோனா பெருந்தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் சிறைச்சாலைகளில் கூட்ட நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுங்கள் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி
நாட்டில் கொரோனா பெருந்தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், சிறைச்சாலைகளில் கடந்த ஆண்டு யாரெல்லாம் ஜாமின் அல்லது பரோலில் விடுவிக்கப்பட்டனரோ அவர்களை உடனடியாக விடுவிக்க சுப்ரீம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா காலகட்டத்தில், சிறைகளில் கைதிகள் நெருக்கமாக அடைக்கப்படுவதை தவிர்க்க, 7 ஆண்டுக்கும் குறைவான சிறைத்தண்டனை பெறக்கூடிய வழக்குகளில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்யக்கூடாது என, போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்றை தடுக்க கடந்த ஆண்டு பரோல் வழங்கப்பட்ட தண்டனை கைதிகளுக்கு இந்த ஆண்டும் 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறைகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சிறைச்சாலைகளை ஆய்வு செய்து தேவையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதுடன், தொற்று பாதிப்பு வாய்ப்பு உள்ள கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story