தீபாவளி பண்டிகைக்கு 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி: எங்கு தெரியுமா?

சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்களை கணக்கில் எடுத்து கொண்ட மாநில அரசானது தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
ஜெய்ப்பூர்,
அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் அரசானது தீபாவளி பண்டிகைக்கு 2 மணி நேரம் மட்டும் பட்டாசுகளை வெடிக்க மக்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக, மாநில அரசு பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் தடை விதித்திருந்தது. இருப்பினும், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்களை கணக்கில் எடுத்து கொண்ட அரசானது தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
அரசின் அறிவிப்பின்படி, தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்க அரசு இரண்டு மணி நேரம் நிர்ணயித்துள்ளது. அதாவது இரவு 8 மணி முதல்10 மணி வரை மட்டும் பட்டாசுகளை வெடிக்க மக்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் மாநிலத்தில் பசுமைப்பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யவும் வெடிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, அரசின் விதிகளுக்கு எதிராக பட்டாசுகள் விற்பனை செய்தால், ரூ 10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், இரவு 10 மணிக்கு மேல் பட்டாசுகளை வெடித்தால், ரூ 2,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story