நாட்டில் மின்சார தட்டுப்பாடு இல்லை: மின்சாரத்துறை மந்திரி தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 Oct 2021 4:05 AM GMT (Updated: 26 Oct 2021 4:05 AM GMT)

80 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது என்றும் தற்போது நாட்டில் மின்சார தட்டுப்பாடு இல்லை என்றும் மின்சாரத்துறை மந்திரி ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் நிலையங்களுக்கு போதுமான நிலக்கரி கிடைக்கவில்லை. இதனால் நாட்டின் பல பகுதிகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் நாட்டில் மின்சார தட்டுப்பாடு இல்லை என மத்திய மின்சாரத்துறை மந்திரி ஆர்.கே.சிங் கூறியுள்ளார். 

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும்போது, ‘பின்னடைவு இருக்காது. நேற்று (நேற்று முன்தினம்) மின்தடை எதுவும் இல்லை. மின் பற்றாக்குறையும் இருந்ததில்லை, இதற்கு முன்பும் அது நடக்கவில்லை. ஏதேனும் தடை ஏற்பட்டால், அதற்கு நமது சொந்த தடைகள் தான் காரணம்’ என்று கூறினார். மின் உற்பத்தி நிலையங்களில் 80 லட்சம் டன்னுக்கு அதிகமான நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக கூறிய மந்திரி ஆர்.கே.சிங், நிலக்கரி இந்தியா நிறுவனத்துக்கு ரூ.16 ஆயிரம் கோடி பாக்கி வைத்திருப்பதாகவும், மின்சாரம் இலவசம் இல்லை என்பதை மாநிலங்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Next Story