எல்லையில் ஊடுவல், கடத்தல் கும்பலை கண்காணிக்கும் பணியில் மோப்ப நாய்கள்
ஊடுவல்காரர்கள், கடத்தல்காரர்களை கண்காணிக்க எல்லையில் மோப்ப நாய்களை எல்லை பாதுகாப்பு படை குவித்து உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவின் அண்டை நாடுகளுடனான எல்லை பகுதிகளை எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர். எல்லை பகுதியின் நீளம் 6,386.36 கி.மீ. தொலைவுக்கு உள்ளது.
எனினும், அடர்பனி மற்றும் அடர்வன பகுதியில் தெளிவான வானிலை காணப்படாது. இதனால், ரோந்து பணியில் வீரர்களுக்கு உதவும் வகையில் பயிற்சி பெற்ற மோப்ப நாய்களை ஈடுபடுத்த எல்லை பாதுகாப்பு படை முடிவு செய்து உள்ளது.
இதுபற்றி பி.எஸ்.எப். இயக்குனர் ஜெனரல் பங்கஜ் சிங் கூறும்போது, எல்லை பகுதிகளில் ரோந்து பணிக்காக பல்வேறு இனங்களை சேர்ந்த 674 மோப்ப நாய்கள் உள்ளன. அவை, மனிதர்களை விட மோப்பம், கேட்கும் திறன் மற்றும் பார்க்கும் திறன் கொண்டவை என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story