தேசிய செய்திகள்

மராட்டியத்திற்கு வந்த 6 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Omicron corona exposure confirmed for 6 passengers arriving in Marathaland

மராட்டியத்திற்கு வந்த 6 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மராட்டியத்திற்கு வந்த 6 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தென்ஆப்பிரிக்கா அல்லது ஒமிக்ரான் ஆபத்து நிறைந்த பிற நாடுகளில் இருந்து மராட்டியத்திற்கு வந்த 6 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் ஒமிக்ரான் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.  மும்பை விமான நிலையத்தில் ஒமிக்ரான் கொரோனா தடுப்பு பற்றி மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மேயர் கிஷோரி பட்னாகர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இதுபற்றி அவர் கூறும்போது, விமான நிலையத்தில் வந்து இறங்கும் ஒவ்வொரு பயணியையும் பரிசோதனை செய்கிறோம் என்று அதிகாரிகள் என்னிடம் கூறினர்.  பயணிகளை தனிமைப்படுத்துதலுக்கு அனுப்பி வைக்கிறோம்.  மும்பையில் ஒமிக்ரான் பாதிப்பு இதுவரை இல்லை என்று அவர் கூறினார்.

எனினும், தென்ஆப்பிரிக்கா அல்லது ஒமிக்ரான் ஆபத்து நிறைந்த பிற நாடுகளில் இருந்து மராட்டியத்திற்கு வந்த 6 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என மராட்டிய பொது சுகாதார துறை தெரிவித்து உள்ளது.  அவர்கள் அறிகுறிகள் அற்றவர்களாகவோ அல்லது லேசான அறிகுறிகளை கொண்டவர்களாகவோ இருக்கின்றனர்.  அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியும் நடந்து வருகிறது என்றும் தெரிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அடுத்த இரண்டு மூன்று நாட்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மூன்று நாட்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
2. டெல்லியில் படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 11,684- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கொரோனா அதிகரிப்பால் டோலோ 650 விற்பனையில் சாதனை
நாட்டில் கொரோனா மூன்றாம் அலை தாக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், மீண்டும் பாராசிட்டமால் மாத்திரிகளின் விற்பனை ஏறுமுகம் கண்டுள்ளது.
4. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்...!
நடிகை கீர்த்தி சுரேஷ், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார்.
5. மும்பை போலீசார் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டியத்தில் மும்பை போலீசாரில் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.