நாடாளுமன்ற வளாகத்தில் திடீர் 'தீ’ விபத்து


நாடாளுமன்ற வளாகத்தில் திடீர் தீ’ விபத்து
x
தினத்தந்தி 1 Dec 2021 9:50 AM IST (Updated: 1 Dec 2021 9:50 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை திடீரென ’தீ’ விபத்து ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள அறை எண் 59-ல் இன்று காலை 8 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத்துறை அறையில் பற்றி எரிந்த ’தீ’ அணைத்தனர். இந்த தீவிபத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், இந்த தீவிபத்தில் அந்த அறையில் இருந்த சில கோப்புகள் எரிந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story