எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் இன்றும் முடக்கம்


எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் இன்றும் முடக்கம்
x
தினத்தந்தி 1 Dec 2021 3:17 PM IST (Updated: 1 Dec 2021 3:17 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி,
 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், முந்தைய மழைக்கால தொடரின்போது மாநிலங்களவையில் போர்க்கோலம் பூண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 12  பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 

12 எம்.பி.க்கள் மீதான இந்த நடவடிக்கை எதிர்க்கட்சியினரிடம் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த எம்.பி.க்கள் மீதான நடவடிக்கையை திரும்பப்பெற்று அவர்களை மீண்டும் அவையில் அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நேற்று அவை நடவடிக்கைகள் முடங்கியது. 

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்றும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் 3-வது நாளாக முடங்கியுள்ளது. 

Next Story