8 முக்கிய துறைகளின் உற்பத்தி 7.5 சதவீதம் உயர்வு


8 முக்கிய துறைகளின் உற்பத்தி 7.5 சதவீதம் உயர்வு
x
தினத்தந்தி 2 Dec 2021 12:12 AM IST (Updated: 2 Dec 2021 12:12 AM IST)
t-max-icont-min-icon

அக்டோபர் மாதத்தில் 8 முக்கிய துறைகளின் உற்பத்தி 7.5 சதவீதம் உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய பொருள்கள், உரம், உருக்கு, சிமெண்டு மற்றும் மின்சாரம் ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக ஆதாரமாக விளங்கும் 8 உள்கட்டமைப்பு துறைகளாகும்.

இந்த நிலையில்,கடந்த அக்டோபர் மாதத்தில், நிலக்கரி, இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், கச்சா எண்ணெய், உரம், உருக்கு, சிமெண்டு, மின்சாரம் ஆகிய 8 முக்கிய துறைகளின் உற்பத்தி அதிகமாக இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இவற்றின் உற்பத்தி 7.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது.

Next Story