மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் பசில் ராஜபக்சே சந்திப்பு
டெல்லி வந்துள்ள இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்தார்.
புதுடெல்லி,
டெல்லி வந்துள்ள இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்தார். அப்போது இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக அவர்கள் விவாதித்தனர். மேலும் பல்வேறு பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் மூலம் இலங்கைக்கு இந்தியா வழங்கிவரும் ஆதரவுக்கு பசில் ராஜபக்சே நன்றி தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர், இலங்கை நிதியமைச்சக செயலாளர் எஸ்.ஆர்.அட்டிகல்லே, இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்தா மொரகொட மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story