ஒமைக்ரான் பரவல் :3-வது பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி கோரும் சீரம் இந்தியா நிறுவனம்


ஒமைக்ரான் பரவல் :3-வது பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி கோரும் சீரம் இந்தியா நிறுவனம்
x
தினத்தந்தி 2 Dec 2021 1:35 PM IST (Updated: 2 Dec 2021 1:35 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸை பொதுமக்களுக்கு செலுத்த அனுமதி அளிக்குமாறு சீரம் இந்தியா நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.

டெல்லி ,

பல உலக நாடுகள் தொடர்ந்து கொரோனா தொற்றுநோயை  எதிர்கொண்டு வருகின்றன. மேலும் தற்போது  புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் பல நாடுகளில் பரவுவதால் கொரோனா  தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸை பொதுமக்களுக்கு செலுத்த அனுமதி அளிக்குமாறு சீரம் இந்தியா நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.

இது குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களின் இயக்குநர் பிரகாஷ் குமார் சிங் மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு ஆணையத்திற்கு எழுதி உள்ள கடிதத்தில் 
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

பொதுமக்களுக்கு செலுத்துவதற்கான போதுமான கோவிஷீல்டு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான சூழல் தற்போது நிலவி வருகிறது.புதிய கொரோனா வைரஸ் மாறுபாடுகள்  காரணமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு  செலுத்த அனுமதி வழங்கவேண்டும் .

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story