விமானப் பயணிகள் 4 பேருக்கு கொரோனா! ஒமைக்ரான் பாதிப்பா என அச்சம்...?


விமானப் பயணிகள் 4 பேருக்கு கொரோனா! ஒமைக்ரான் பாதிப்பா என அச்சம்...?
x
தினத்தந்தி 2 Dec 2021 2:01 PM IST (Updated: 2 Dec 2021 2:01 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி விமான நிலையம் வந்து இறங்கிய 4 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

புதுடெல்லி,

பிரான்ஸ் நாட்டிலிருந்து 243 பயணிகளுடன் ‘ஏர் பிரான்ஸ்’ விமானம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்தது . 

அனைத்து பயணிகளுக்கும்  கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவரும் வரை பயணிகள் வெளியே செல்ல அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டது.லண்டனிலிருந்து 195 பயணிகளுடன் வந்த மற்றொரு விமானத்தில் பயணித்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

அவர்களுடைய சளி மாதிரிகள் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு ஆய்வு செய்த பின் ஒமைக்ரான் தொற்று உள்ளதா இல்லையா என்பது தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் லோக் நாயக் மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒமைக்ரான் பாதிப்பில் அதீத அபாயகரமான நாடுகள் என மத்திய அரசால் ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அவை இங்கிலாந்து, மற்றும் தென்னாப்பிரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் அகிய நாடுகள் ஆகும். 

இந்த குறிப்பிட்டவெளிநாடுகளில்  இருந்து வரும் விமான பயணிகளுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகள்  வரையறுக்கப்பட்டுள்ளன. அந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு  வந்த பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் இதுவரை மொத்தம் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் இதுவரை எவருக்கும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

Next Story