டியூசன் மாஸ்டருடன் கள்ளக்காதல்... திருமணத்துக்கு பின் கண்டு கொள்ளாததால் தீர்த்து கட்ட திட்டம்; பெண் கைது


டியூசன் மாஸ்டருடன் கள்ளக்காதல்... திருமணத்துக்கு பின் கண்டு கொள்ளாததால்  தீர்த்து கட்ட திட்டம்; பெண் கைது
x
தினத்தந்தி 2 Dec 2021 3:18 PM IST (Updated: 2 Dec 2021 3:45 PM IST)
t-max-icont-min-icon

டியூசன் மாஸ்டருடன் உல்லாச வாழ்க்கை... கள்ளகாதலனை தீர்த்து கட்ட துப்பாக்கியுடன் கூலிப்படைக்காக காத்திருந்த இளம் பெண் பிடிபட்டார்.

புதுடெல்லி,

நொய்டாவை சேர்ந்த பெண் ஒருவர் கூலிப்படை ஏவி தனது கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். நொய்டாவை சேர்ந்த 39 வயதான பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

குழந்தைகளுக்கு டியூசன் சொல்லி கொடுக்கும் இளைஞருடன் அந்தப் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் பல முறை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 35 வயதான அந்த நபர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நொய்டாவை விட்டு தனது சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜான்பூர்-க்கு சென்றுவிட்டார்.

சமீபத்தில் அந்த நபருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணத்துக்கு முன்பு வரை அந்தப்பெண்ணிடம் பேசி வந்துள்ளார். திருமணத்துக்கு பின் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். மேலும் அந்தப்பெண்ணின் செல்போன் எண்ணையும் பிளாக் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் அந்த நபரை தீர்த்து கட்டுவது என முடிவு செய்து கூலிப்படையை ஏவியுள்ளார். இந்த தகவல் ரகசிய போலீஸ்  மூலம் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

Next Story