நாட்டில் இரு மாநிலங்களில் 55% கொரோனா பாதிப்புகள்; மத்திய அரசு தகவல்


நாட்டில் இரு மாநிலங்களில் 55% கொரோனா பாதிப்புகள்; மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 2 Dec 2021 5:47 PM IST (Updated: 2 Dec 2021 5:47 PM IST)
t-max-icont-min-icon

நாட்டில் இரு மாநிலங்களில் 55% கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார துறையின் இணை செயலாளர் தெரிவித்து உள்ளார்.


புதுடெல்லி,

டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சக கூட்டம் இன்று நடந்தது.  இதில் பேசிய மத்திய சுகாதார துறையின் இணை செயலாளர் லவ் அகர்வால், இந்தியாவில் இரு மாநிலங்களில் 55% கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்படுகின்றன என கேரளா மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களை சுட்டி காட்டியுள்ளார்.

ஒட்டுமொத்த அடிப்படையில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து உள்ளது.  அவற்றில் கடந்த ஒரு வாரத்தில், ஐரோப்பிய நாடுகளில் 70% அளவுக்கு எண்ணிக்கை பதிவாகி உள்ளது.  வார இறுதி நாளான 28ந்தேதியில், 2.75 லட்சம் புதிய பாதிப்புகளும், 31 ஆயிரம் உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.


Next Story