அரசு வேலை வாய்ப்பு இல்லாததால் இளைஞர்கள் விரக்தி - வருண் காந்தி கருத்து
அரசு வேலை வாய்ப்பு இல்லாததால் இளைஞர்கள் விரக்தி அடைந்துள்ளனர் என்று பா.ஜனதா எம்.பி வருண் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பா.ஜனதா எம்.பி. வருண் காந்தி, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும், பொருளாதாரம், வேலைவாய்ப்பு பிரச்சினைகளில் மத்திய அரசை மறைமுகமாக விமர்சித்தும் கருத்து தெரிவித்து வருகிறார்.
நேற்று அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கிராமப்புறங்களில் சராசரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால், அரசு வேலை மட்டுமே ஒரே வாய்ப்பாக உள்ளது. ஆனால், அரசு முன்பு இருந்ததை விட குறைவானவர்களையே பணியில் அமர்த்துகிறது. முதலில், அரசு வேலைவாய்ப்புகளே இல்லை. அப்படி வேலைவாய்ப்பு இருந்தாலும், வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி விடுகிறது.
ஒருவேளை தேர்வு நடந்தாலும், பல ஆண்டுகளாக தேர்வு முடிவு வெளியாவது இல்லை அல்லது ஊழல் காரணமாக தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இன்னும் இளைஞர்கள் எவ்வளவு காலம்தான் பொறுமையாக இருப்பது? அவர்கள் மனதில் விரக்தி மனப்பான்மை குடி கொண்டு விட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story