பா.ஜனதாவை தோற்கடிக்க மதச்சார்பற்ற கட்சிகளிடையே ஒத்துழைப்பு அவசியம் - காங்கிரஸ் கருத்து
பா.ஜனதாவை தோற்கடிக்க மதச்சார்பற்ற கட்சிகளிடையே ஒத்துழைப்பு அவசியம் தேவை என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,
ஐக்கிய முற்போக்கு கூட்டணியே தற்போது இல்லை என்று மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவை காங்கிரஸ் துணை தலைவர் ஆனந்த் சர்மா நேற்று கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
பா.ஜனதாவை தோற்கடிக்க மதச்சார்பற்ற, முற்போக்கு, ஜனநாயக அரசியல் கட்சிகளிடையே பரவலான புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பு நிலவுவது அவசியம். அது மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும். இதற்கான தேசிய கூட்டு முயற்சியின் மைய தூணாக காங்கிரஸ் தொடர்ந்து செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story