கன்னட நடிகர் சிவராம் கவலைக்கிடம்: தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை


கன்னட நடிகர் சிவராம் கவலைக்கிடம்: தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 3 Dec 2021 3:49 AM IST (Updated: 3 Dec 2021 3:49 AM IST)
t-max-icont-min-icon

கன்னட திரை உலகில் ஆழமாக தடம் பதித்தவர் பிரபல நடிகர் சிவராம். அவர் முதன் முதலில் 1965-ம் ஆண்டு 'பெரத ஜீவ' என்ற கன்னட படத்தில் நடித்தார்.

பெங்களூரு,

கன்னட திரை உலகில் ஆழமாக தடம் பதித்தவர் பிரபல நடிகர் சிவராம். அவர் முதன் முதலில் 1965-ம் ஆண்டு 'பெரத ஜீவ' என்ற கன்னட படத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் கதாநாயனாக பல படங்களில் நடித்துள்ளார். அவர் பல படங்களை தயாரித்து இயக்கியுள்ளார். குணச்சித்திர வேடங்களிலும் அவர் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். மறைந்த நடிகர் ராஜ்குமாருடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அவர் பெங்களூருவில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் கால் தவறி வழுக்கி தரையில் விழுந்துள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை குடும்பத்தினர் உடனடியாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் சுய நினைவு இல்லாமல் கோமாவில் உள்ளார். மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Next Story