ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க புதிய வழிகாட்டுதல் வெளியிடப்படும் - பசவராஜ் பொம்மை பேட்டி


ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க புதிய வழிகாட்டுதல் வெளியிடப்படும் - பசவராஜ் பொம்மை பேட்டி
x
தினத்தந்தி 3 Dec 2021 4:06 AM IST (Updated: 3 Dec 2021 4:06 AM IST)
t-max-icont-min-icon

நாட்டிலேயே முதலாவதாக கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூருவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

பெங்களூரு, 

நாட்டிலேயே முதலாவதாக கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூருவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகம் மட்டுமின்றி இந்திய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது அதிவேகமாக பரவக்கூடிய தன்மையை கொண்டதால் சுகாதாரத்துறை பீதி அடைந்துள்ளது. 

 இந்த நிலையில் டெல்லியில் பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘‘கர்நாடகத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான அறிக்கையை வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளேன். அந்த அறிக்கையை வழங்குவதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து ஒரு புதிய வழிகாட்டுதல் வெளியிடப்படும்.

இவ்வாறு பசுராஜ் பொம்மை கூறினார்.

Next Story