ஒமைக்ரான் கொரோனா :60 ஆண்டுகளுக்கு முன்பே திரைப்படம் வெளியானதா...? என்னப்பா சொல்றீங்க...!
இந்தியாவிலும் முதல்முறையாக நேற்று இருவருக்கு ஒமைக்ரான் திரிபு கொரோனா பாதிப்பு உறுதியானதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி
‘ஒமைக்ரான்’ என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ‘ஒமைக்ரான்’ வைரஸ் வேகமாக பரவுகிறது. அதுமட்டும் இன்றி ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் ‘ஒமைக்ரான்’ கால்பதித்து விட்டது. இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ‘ஒமைக்ரான்’ வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
உலகம் முழுவதும் மொத்தம் 29 நாடுகளில் ஒமைக்ரான் பரவி 373 பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. இவற்றில் தென்ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் அடங்கும். சமீபத்தில் இந்த பட்டியலில் கானா, நைஜீரியா, நார்வே, சவுதி அரேபியா மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவல் ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவிலும் முதல்முறையாக நேற்று இருவருக்கு ஒமைக்ரான் திரிபு கொரோனா பாதிப்பு உறுதியானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னரே ஒமைக்கிரான் குறித்த திரைப்படம் வெளியானதாக தகவல்கள் பரவுகின்றன. அதன் உண்மை என்ன?
தி ஒமைக்ரான் வேரியன்ட்" என்கிற பெயரில் சினிமா ஒன்று 1963ம் ஆண்டே வெளியாகியுள்ளது என்று நெட்டிசன்கள் பகிர்ந்தனர். இது வைரலாகியது.
பிரபல டைரக்டர் ராம்கோபால் வர்மாவும், ''இதை நம்பினால் நம்புங்கள். இந்த படம் 1963ம் ஆண்டே வெளியாகியுள்ளது. டேக்லனை பாருங்கள்," என்று பதிவிட்டிருந்தார்.
அவர் டுவிட்டரில் பகிந்திருந்த போஸ்டரில் "உலகம் கல்லறையாகிய நாள்" என்கிற,டேக்லைன் இருந்தது.
Believe it or faint ..This film came In 1963 ..Check the tagline 😳😳😳 pic.twitter.com/ntwCEcPMnN
— Ram Gopal Varma (@RGVzoomin) December 2, 2021
இதைத் தொடர்ந்து பலரும் வேகமாக பகிர்ந்து, இதை வைரலாக்கினர். ஆனால், இது உண்மையில்லை.
இது உண்மை கண்டறியும் முயற்சியில் உறுதியாகியுள்ளது. அயர்லாந்தைச் சேர்ந்த டைரக்டரும் எழுத்தாளருமான பெக்கி சீட்டில், கடந்த நவம்பர் 28ம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில், சில திரைப்பட போஸ்டரில் சில திருத்தங்களை போட்டோஷாப்பில் செய்து பகிர்ந்தார். எழுபதுகளில் வந்த படங்களின் போஸ்டரில் ''தி ஒமைக்ரான் வேரியன்ட்'' எனத் தாம் போட்டோஷாப் செய்ததாக அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதை ஆதாரமாக் கொண்டு பலரும் பகிர்ந்துள்ளனர்.
ஆனால், "இதை நான் விளையாட்டாக செய்தேன். நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளுங்கள்," என்கிற அவரது மறு பகிர்வை கவனிக்க தவறி விட்டனர். இந்த விளக்கத்தை டிசம்பர் 1ஆம் தேதி அவர் வெளியிட்டிருந்தார்.
1963ம் ஆண்டு யுகோ கிரிகோர்டி எனும் இத்தாலிய திரைப்பட டைரக்டரின் இயக்கத்தில் 'ஒமைக்ரான்' என்கிற பெயரில் ஒரு படம் வந்துள்ளது. இது ஓர் அறிவியல் புனைவு கதை. ஆனாலும் இதற்கும் கொரோனா திரிபு ஒமைக்ரானுக்கும் தொடர்பு இல்லை.
Hi. It's been brought to my attention that one of my posters is circulating on Spanish language Twitter as "proof" of a COVID hoax. It's just a goof because I thought Omicron Variant sounded like a 70s sci-fi movie. Please do not get sick on account of my dumb joke. Thanks https://t.co/iecwEEOVBq
— Becky Cheatle (@BeckyCheatle) December 1, 2021
Related Tags :
Next Story