தெலுங்கானாவில் 40 பேர் கொண்ட சட்டவிரோத வெளிநாட்டு கும்பல் கைது
தெலுங்கானாவில் சட்டவிரோத வகையில் தங்கியிருந்த 40 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ரங்கா ரெட்டி,
தெலுங்கானாவில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் ராஜேந்திரா நகரில் போலீசார் சோதனை நடத்தியதில் விசா காலாவதியான பின்பும் தங்கியிருந்த வெளிநாடுகளை சேர்ந்த 40 பேர் தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்கள் ஆப்பிரிக்கா, சோமாலியா, நைஜீரியா மற்றும் காங்கோ உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களில் தெலுங்கு பாடல்களை பாடி பிரபலமடைந்த நைஜீரியாவை சேர்ந்த கலைஞர் ஒருவரும் அடங்குவார்.
இந்த சோதனையில் 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். விசா காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோத வகையில் தங்கியிருந்ததற்கான காரணம் பற்றி அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story