கொரோனா பலி 4.6 லட்சம்; உலக அளவில் மிக குறைவு: மத்திய மந்திரி தகவல்


கொரோனா பலி 4.6 லட்சம்; உலக அளவில் மிக குறைவு:  மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 3 Dec 2021 3:53 PM IST (Updated: 3 Dec 2021 6:14 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் 4.6 லட்சம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர் என்றும் இது உலக ஒப்பீட்டு அளவில் இது மிக குறைவு என்றும் மத்திய மந்திரி தெரிவித்து உள்ளார்.



புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  கடந்த ஏப்ரலில் இந்த பாதிப்புகள் நாட்டில் உச்சம் எட்ட தொடங்கின.

ஒரு கட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை நாளொன்றுக்கு 4 லட்சம் என்ற அளவில் பதிவாகி அச்சம் ஏற்படுத்தியது.  இதேபோன்று உயிரிழப்புகளும் அதிகரித்து வந்தன.  இதன்பின் நாட்டில் பாதிப்புகள் குறைய தொடங்கின.

நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில், மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா மக்களவையில் இன்று பேசும்போது, 
இந்தியாவில் இதுவரை 3.46 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

4.6 லட்சம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர்.  இது மொத்த எண்ணிக்கையில் 1.36% ஆகும்.  இந்தியாவின் மக்கள் தொகையில் 10 லட்சம் பேரில் 25 ஆயிரம் பேருக்கு பாதிப்புகள் மற்றும் 340 உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன.  இது உலக ஒப்பீட்டு அளவில் மிக குறைவாகும் என தெரிவித்து உள்ளார்.


Next Story