“ஒமைக்ரான் வைரஸ்” 35 நாடுகளில் பரவல் - தடுப்பு நடவடிக்கை தீவிரம்
ஒமைக்ரான் வைரஸ், உலகமெங்கும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
புதுடெல்லி,
‘ஒமைக்ரான்’ என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தென்ஆப்பிரிக்காவில் பரவ தொடங்கிய ஒமைக்ரான் வைரஸ் தற்போது 35 நாடுகளில் பரவியுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பரவிய நாடுகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஒமைக்ரான் வைரஸ் நாடுகள் பரவிய விவரம்:-
தென் ஆப்பிரிக்கா
நெதர்லாந்து
பெல்ஜியம்
ஜெர்மனி
ஸ்பெயின்
டென்மார்க்
ஜப்பான்
ஐக்கிய அரபு அமீரகம்
பிரேசில்
அயர்லாந்து
கானா
போட்ஸ்வானா
பிரிட்டன்
செக் குடியரசு
இத்தாலி
போர்ச்சுகல்
ஸ்காட்லாந்து
ஹாங்காங்
அமெரிக்கா
ஆஸ்திரேலியா
பின்லாந்து
சிங்கப்பூர்
நைஜீரியா
ஆஸ்திரியா
பிரான்ஸ்
நார்வே
ஸ்வீடன்
தென் கொரியா
சவுதி அரேபியா
கனடா
இஸ்ரேல்
இந்தியா
மலேசியா
கீரிஸ்
ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் பரவியுள்ளது.
Related Tags :
Next Story