ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 8-ந் தேதி மும்பை வருகை


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 8-ந் தேதி மும்பை வருகை
x
தினத்தந்தி 4 Dec 2021 12:54 AM IST (Updated: 4 Dec 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 8-ந் தேதி மும்பை வருகை தருகிறார்.

மும்பை, 

மும்பையில் நேவல் டாக்யார்டு ரோடு பகுதியில் கடற்படை தளத்தில் கில்லர் ஸ்குவாட்ரான் என்று அழைக்கப்படும் 22-வது ஏவுகணையை கடற்படைக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மும்பைக்கு வருகிற 8-ந்தேதி வருகை தருகிறார்.

கடற்படை நிகழ்ச்சிக்கு பிறகு அவர் ராய்காட் கோட்டையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் உருவசிலைக்கு மரியாதை செலுத்த ராய்காட் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story