விவசாயிகள் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்: வேளாண் துறை மந்திரி


விவசாயிகள் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்: வேளாண் துறை மந்திரி
x
தினத்தந்தி 4 Dec 2021 9:33 PM IST (Updated: 4 Dec 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

விவசாய சகோதரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு, தங்கள் வழக்கமான பணியை தொடர வேண்டும் என நரேந்திர சிங் தோமர் வலியுறுத்தியுள்ளார்.

கவாலியர்,

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக  தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்ற மத்திய அரசு, வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றுள்ளது. எனினும், குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்த விவசாய அமைப்புகள், போராட்டம் கைவிடப்படாது என அறிவித்தனர்.    குறைந்தபட்ச ஆதார விலையை அமைப்பது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட 5 பேர் கொண்ட குழுவை விவசாயிகள் சங்கத்தினர் அமைத்துள்ளனர். 

இந்த நிலையில்,   மத்திய பிரதேச மாநிலம் கவாலியரில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், தற்போது எந்த பிரச்சினையும் நிலுவையில்  இல்லை என்றே நினைக்கிறேன். எனவே விவசாய சகோதரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு, தங்கள் வழக்கமான பணியை தொடர வேண்டும்” என்றார். 

Next Story