மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு மேலும் 14- பேர் உயிரிழப்பு


மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு மேலும் 14- பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 4 Dec 2021 9:43 PM IST (Updated: 4 Dec 2021 9:43 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 7,129- ஆக உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 782- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 770 பேர் ஒரே நாளில் குணம் அடைந்துள்ளனர். 

கொரோனா பாதிப்புக்கு மேலும் 14- பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,41,163- ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 66 லட்சத்து 38 ஆயிரத்து 071- ஆக உயர்ந்துள்ளது. குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 64 லட்சத்து 86 ஆயிரத்து 105- ஆக அதிகரித்துள்ளது. 

மராட்டியத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 7,129- ஆக உள்ளது. தொற்று மீட்பு விகிதம் 97.71 சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,23,492- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  மாநில தலைநகர் மும்பையில் மேலும் 213- பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.


Next Story