தேசிய செய்திகள்

என் மனைவி ஒருநாளில் 6 முறை குளிக்கிறார்: விவாகரத்து கேட்டு கோர்ட்டை நாடிய கணவர்! + "||" + Bengaluru: Wife washes techie’s laptop and phone; he wants divorce

என் மனைவி ஒருநாளில் 6 முறை குளிக்கிறார்: விவாகரத்து கேட்டு கோர்ட்டை நாடிய கணவர்!

என் மனைவி ஒருநாளில் 6 முறை குளிக்கிறார்: விவாகரத்து கேட்டு கோர்ட்டை நாடிய கணவர்!
ஒரு கட்டத்தில் எல்லை மீறியதால் எரிச்சலடைந்த ரோகித், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா திரும்பியிருக்கிறார்.
பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ரோகித் & சுமதி (பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன), இந்த தம்பதிக்கு பெற்றோர்கள் சம்மத்துடன் பெங்களூருவில் 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு தன் மனைவியுடன் ரோகித் லண்டனுக்கு குடியேறியுள்ளார். ஏற்கனவே சுமதிக்கு சுற்றுப்புறத்தை அதீத சுத்தமாக வைத்துக்கொள்ளும் வகை உளவியல் ரீதியான OCD (Obsessive-Compulsive Disorder) பிரச்சினை இருந்துள்ளது.

இப்பிரச்சினையானது, சுமதியின் முதல் குழந்தை பிறந்த பின்னர் மேலும் அதிகரித்துள்ளது. தன் கணவர் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய பின்னர் தொடர்ச்சியாக செல்போன், ஷூக்கள், துணிகளைச் சுத்தப்படுத்துமாறு கூறியிருக்கிறார். இதனால் ஒரு கட்டத்தில் எல்லை மீறியதால் எரிச்சலடைந்த ரோகித், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா திரும்பியிருக்கிறார்.

பின்னர் தன் மனைவியை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். மனநல ஆலோசனைக்குப் பிறகு இப்பாதிப்பு சுமதிக்கு சற்று குறைந்துள்ளது. ஆனால் சுமதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்த பின்னரும் அதே பிரச்சினை மீண்டும் வெடித்தது. 

2020ஆம் ஆண்டின் கொரோனா ஊரடங்கிற்குப் பின்பு மனைவியின் நிலைமை படு மோசமாகியது. வீட்டில் ரோகித் பயன்படுத்தும் மடிக்கணினி, செல்போன் போன்றவற்றைச் சோப்புத்தூள் கொண்டு கழுவுவது, வீட்டிலிருக்கும் பொருள்களை அடிக்கடி சுத்தம் செய்வதாகவே இருந்து வந்திருக்கிறார். தற்போது குழந்தைகளின் புத்தகப்பை, ஷூக்களை இவ்வாறாக சுத்தம் செய்கிறார்.

இதனால் பொறுமையிழந்த ரோகித், ஆர்.டி. நகர் காவல் நிலையத்தில் இது பற்றி புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் இவ்விவகாரத்தை ’வனிதா சஹாய வாணி'யிடம் (பெங்களூருவில் பெண்களுக்கு உதவியாக இயங்கிவரும் இயக்கம்) அனுப்பி வைத்துள்ளனர்.